அதிக வயதான பெண் புலி ஸ்வாதி உயிரிழந்தது.! - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

அதிக வயதான பெண் புலி ஸ்வாதி உயிரிழந்தது.!

பொதுவாகவே புலிகள் 20 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்வது கடினம். ஆனால், இந்தியாவின் வயதான புலியான ஸ்வாதி இன்று உயிரிழந்துவிட்டது. அஸாமின், கவுகாத்தியில் உள்ள உயிரியல் பூங்காவில் பெங்கால் புலியான ஸ்வாதி பாதுகாக்கப்பட்டு வந்தது.
1997 ஆம் ஆண்டு மைசூரில் பிறந்த ஸ்வாதி இதுவரை 11 குட்டிகள் ஈன்றுள்ளது. அவை அனைத்தும் ஆரோக்கியமான நிலையில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள உயிரியல் பூங்காக்களில் வளர்க்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், இன்று பூங்கவினுள்ளே சுதந்திரமாக சுற்றித்திரிந்த இன்று ஸ்வாதி உயிரிழந்தது. இது பூங்கா ஊழியர்கள் மற்றும் பொதுமக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது

About UK TAMIL NEWS