யாழில் பெண்ணை பேய்க்காட்டிய பெண்ணொருவர் வசமாக மாட்டினார் - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

யாழில் பெண்ணை பேய்க்காட்டிய பெண்ணொருவர் வசமாக மாட்டினார்

யாழ்ப்பாணம் நாவற்குழி பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரிடம் பண மோசடி செய்த குற்றச்சாட்டின்பேரில் தென்னிலங்கையைச் சேர்ந்த, வயதான பெண்ணொருவர் இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெளிநாடு ஒன்றுக்கு அனுப்புவதாக கூறியே இந்தப் பணமோசடி இடம்பெற்றுள்ளதாகக் குறிப்பிடப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
யாழ்ப்பாணம் நாவற்குழியைச் சேர்ந்த பெண்ணொருவரிடம் இரத்தினபுரி மாவட்டம் எம்பிலிப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த, ஐம்பது வயதான பெண்ணொருவர் ஆறு லட்சத்து எழுபதாயிரம் ரூபா பணத்தை வாங்கி ஏமாற்றியுள்ளார்.
இந்த நிலையில், பாதிக்கப்பட்ட பெண் சார்பில், யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தின் விசேட குற்றத்தடுப்பு பிரிவில் செய்த முறைப்பாட்டுக்கு அமையவே, குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

About UK TAMIL NEWS