நடுரோட்டில் தந்தையை இரத்தம் சொட்டும் அளவிற்கு அடித்த மகன்கள் - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

நடுரோட்டில் தந்தையை இரத்தம் சொட்டும் அளவிற்கு அடித்த மகன்கள்

இந்தியாவில் இரண்டு மகன்கள் சேர்ந்து வயது முதிர்ந்த தந்தையை அடித்து உதைத்து தரதரவென இழுத்துச்சென்ற சம்பவம் வீடியோவாக வெளியாகியுள்ளது.
கர்நாடக மாநிலத்திலேயே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. தந்தை சொத்துகளை தர மறுத்ததால் இரண்டு மகன்களும் சேர்ந்து தாக்கியுள்ளனர்.
வீடியோவில், பொதுவெளியில் தந்தையை சரமாரியாக தாக்கும் மகன்கள், முகத்திலிருந்து இரத்தம் சொட்டும் நிலையில் அவர் கால்களை பிடித்து நிலத்தில் தரதரவென இழுத்துச் செல்கின்றனர்.
இதை சுற்றி நின்று வேடிக்கை பார்த்த மக்களில் ஒருவர் கூட தடுக்க முன்வராதது மனிதாபிமானம் அழிந்து வருவதை வெளிக்காட்டியுள்ளதாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. பலர் அந்த மகன்கள் மேல் நடவடிக்கை எடுக்க கோரியுள்ளனர்

About UK TAMIL NEWS