யாழ்ப்பாணத்தில் நடிகை ரம்பா - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

யாழ்ப்பாணத்தில் நடிகை ரம்பா

தமிழ் திரையுலகின் பிரபல்ய நடிகை ரம்பா இன்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்தார்.
இலங்கை தமிழரான இந்திரன் என்பவரை 2010ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார் ரம்பா.
இந்திரன் யாழ்ப்பாணம் சுதுமலைப்பிரதேசத்தை பிறப்பிடமாக கொண்ட நிலையில் இன்றையதினம் நடிகை ரம்பா தனது புகுந்த வீட்டிற்கு வருகை தந்தார்.
திருமணத்துக்கு பின்னர் இருவரும் கனடாவில் வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு லாவண்யா, ஷாசா ஆகிய இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
1993ஆம் ஆண்டு திரைக்கு அறிமுகமாகி பல ரசிகர்களின் கனவுக்கன்னியான ரம்பா ரஜினி,அஜித், விஜய் உட்பட பல பிரபல்ய நடிகர்களுடன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

About UK TAMIL NEWS