பூசாரியின் தண்டனையால் யாழில் பரபரப்பு! - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

பூசாரியின் தண்டனையால் யாழில் பரபரப்பு!

கோவில் அர்ச்சகர் ஒருவர் கோவத்தின் காரணமாக தனது உந்துருளியைக் (மோட்டார் சைக்கிள்) கொளுத்திய சம்பவம் ஒன்று அண்மையில் யாழ்ப்பாணத்தில் பதிவாகியுள்ளது.
துன்னாலை என்ற இடத்தைச் சேர்ந்த அர்ச்சகர் ஒருவர் தூர இடம் ஒன்றுக்கு அவசரமாகச் செல்வதற்காக தனது உந்துருளியை இயக்குவதற்கு நீண்ட நேரமாக முயன்றுள்ளார்.
உந்துருளியின் இயக்கு உதைப்பியை (kicker) மிகுந்த சிரத்தை எடுத்து நீண்ட நேரமாக உதைத்தும் உந்துருளி இயக்க நிலையை அடையாத காரணத்தால் வீட்டுக்குள் வைத்திருந்த மண்ணெண்ணையை எடுத்து அதன்மேல் ஊற்றியுள்ளார்.
”அவசரத்துக்கு உதவாத மோட்டார் சைக்கிள் தேவையில்லை” என்றவாறே மண்ணெண்னை ஊற்றப்பட்டிருந்த தனது உந்துருளிக்கு தீ மூட்டினார்.
ஏனையவர்கள் தீயை அணைக்க முயன்றும் முடியாத காரணத்தால் உந்துருளி முற்றாக எரிந்து சாம்பராகியது. இந்த சம்பவம் அவ்விடத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

About UK TAMIL NEWS