குழந்தைகள் கண்முன்னே தாய் கூட்டு வன்புணர்வு - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

குழந்தைகள் கண்முன்னே தாய் கூட்டு வன்புணர்வு

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் குழந்தைகள் கண்முன்னே பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இவ்விவகாரம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரில், கடந்த திங்களன்று மாலை கணவன் பணிக்கு சென்ற நேரத்தில் அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்த கும்பல் தனது 3 குழந்தைகளின் கண்முன்னே தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக குறிப்பிட்டுள்ளார்.
அதனடிப்படையில், விசாரணையை துவக்கிய காஜுவாகா பகுதி காவல்துறையினர், இச்சம்பவத்தில் தொடர்புடைய 4 பேர் கொண்ட கும்பலை கைது செய்துள்ளனர். மேலும், இதைபற்றி யாரிடமும் சொல்லக் கூடாது என மிரட்டிவிட்டு, வீட்டிலிருந்து 500 ரூபாயையும் மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
குழந்தைகள் முன்பே தாய் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது காஜீவாகா பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

About UK TAMIL NEWS