சைப்ரசில் இலங்கையர் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

சைப்ரசில் இலங்கையர் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை

சைப்ரஸ் நாட்டின் லிமாசோல் நகரில் 42 வயதுடைய இலங்கையர் ஒருவர் இன்று அதிகாலையில் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றின் ஆறாவது மாடியில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டிலேயே இந்தக் கொலை நடந்துள்ளது.
வீட்டின் அழைப்பு மணி ஒலித்த போது, கதவைத் திறந்து பதிலளித்த போதே, இலங்கையர் மீது கத்திக்குத்து மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கத்திக்குத்துக்கு இலக்கானவர் அந்த இடத்திலேயே மரணமானார். குத்தியவர் உடனடியாக அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
காவல்துறையினர் அந்தப் பகுதியை முற்றுகையிட்டு, தப்பிச் சென்ற கொலையாளியைத் தேடி வருகின்றனர். கொலையாளி ஆசிய நாட்டவர் என்றும் அருகில் உள்ள குடியிருப்பு பகுதியிலேயே வசிப்பவர் என்றும் சாட்சிகள் தெரிவித்துள்ளனர்.
கொலையாளிக்கும் கொலை செய்யப்பட்டவருக்கும் இடையில் அறிமுகம் இருந்துள்ளது என்றும் கொலைக்கான காரணம் இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் சைப்ரஸ் காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

About UK TAMIL NEWS