நீதிபதி இளஞ்செழியன் மீது துப்பாக்கி பிரயோகம்! சந்தேகநபர் வழங்கிய வாக்குமூலம் - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

நீதிபதி இளஞ்செழியன் மீது துப்பாக்கி பிரயோகம்! சந்தேகநபர் வழங்கிய வாக்குமூலம்

சம்பவம் இடம்பெற்ற போது தாம் நல்ல குடிபோதையில் இருந்ததாக யாழ்ப்பாணத்தில் பொலிஸ் அதிகாரி மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டமை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள இருவரில் ஒருவர் தெரிவித்துள்ளார்.
பொலிஸாரிடம் வழக்குமூலம் வழங்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட பிரதான சந்தேக நபர் இதுவரையில் கைது செய்யப்படவில்லை.
தற்போது கைது செய்யப்பட்டிருப்பது சம்பவத்தின் போது பிரதான சந்தேக நபருடன் மது அருந்திய இருவராகும் என யாழ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் நேற்று பொலிஸ் தலைமையகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் இந்த சந்தேக நபர்கள் இருவரம் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்திருந்தார்.
பொலிஸ் சார்ஜனின் துப்பாக்கியை பறித்து, இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளது. பிரதான சந்தேக நபர் அந்த சந்தர்ப்பத்தில் குடிபோதையில் இருந்ததாக பொலிஸ் ஊடக பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

About UK TAMIL NEWS