1987-ம் ஆண்டு ராஜீவ் காந்தி உருவாக்கிய இந்திய- இலங்கை ஒப்பந்தம்தான் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை தோற்கடிக்க உதவியது என இலங்கை நாட்டின் அமைச்சர் நவீன் திசநாயக்கே தெரிவித்துள்ளார்.
மேலும் நவீன் திசநாயக்கே பேசுகையில், 1987-ம் ஆண்டு இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி இந்தியா- இலங்கை ஒப்பந்தத்தை உருவாக்கினார்.
இதன் படி இலங்கை அரசு தமிழருக்கு கூட்டாட்சி வடிவிலான தீர்வை வழங்கும் ஈழ இயக்கங்கள் போர்கருவிகளை கீழ் வைக்க வேண்டும். போர்கருவிகளை களைவதை நடைமுறைப் படுத்தும் நோக்கில் இந்திய அமைதி காக்கும் படைய அனுப்புவதாகவும் ஒப்பத்தில் ஏற்பாடாகியிருந்தது. ஈழ இயக்கங்கள் அனைத்தும் இவ்வொப்பந்ததை ஏற்றுக் கொண்டாலும், புலிகள் அமைப்பு எதிர்ப்புத் தெரிவித்தனர்.
மேலும் புலிகள் தமது போர்க்கருவிகளை இந்திய அமைதிக்காக்கும் படைகளிடம் ஒப்படைக்க மறுத்தனர்.
அந்த ஒப்பந்தம் உருவாக்கப்பட்ட போது அப்போதைய ஐக்கிய தேசிய கட்சி அரசில் நவீன் திசநாயக்கேவின் தந்தை காமினி திசநாயக்க தான் அமைச்சராக இருந்ததாகவும் தெரிவித்தார்.
இருப்பினும், இந்த ஒப்பந்தத்தை இலங்கை சுதந்திர கட்சி கடுமையாக எதிர்த்தது.ஒருவேளை இந்த ஒப்பந்தத்தை மட்டும் ஏற்காமல் இருந்திருந்தால் பிரபாகரனை தோற்கடிக்க இலங்கைக்கு எந்த உதவியும் இந்தியா செய்திருக்காது எனவும் கூறினார்.
இதனைத்தொடர்ந்து, 1987-ம் ஆண்டுக்குப் பின்னர் பிரபாகரனை தோற்கடிக்கும் இலங்கையின் நடவடிக்கைகளுக்கு இந்தியா எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. அதேநேரத்தில் பிரபாகரனுக்கு மட்டும் இந்தியா உதவியிருந்தால் இலங்கையின் நிலைமை படுமோசமாகியிருக்கும் என்று கூறினார் நவீன் திசநாயக்கே.
இந்தியா- இலங்கை இடையேயான அந்த ஒப்பந்தம் கையெழுத்தானது ஜூலை மாதம் 29ம் நாள். இந்த ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துதான் ராஜீவ் காந்தியை கொழும்பில் நடைபெற்ற முப்படை அணிவகுப்பின் போது இலங்கை கடற்படை வீரர் விஜெமுனி விஜித ரோஹன துப்பாக்கிக் கட்டையால் தாக்கினார் என்பது வரலாற்று பதிவில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
