மாற்றுத்திறன் படைத்த மன்னார் பெனிலின் கவி நூல் அறிமுக விழா - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

மாற்றுத்திறன் படைத்த மன்னார் பெனிலின் கவி நூல் அறிமுக விழா


மன்னார் பெனில் அவர்கள் முள்ளந்தண்டு  வடம் காயப்பட்டு நெஞ்சு பகுத்திக்கு  கீழே உணர்விழந்தவராய் சக்கர  நாற்காலியின்  உதவியுடன் வாழ்கின்றார்.
பல்வேறு  இன்னல்  துன்பங்கள்  வந்தாலும்  மனம்  தளராது  வாழும்  இவர்  இலக்கியத்தை பெரிதும்  நேசிப்பவராக இருப்பதோடு இலக்கிய பரப்புக்கு இரண்டு கவிதை  தொகுப்புக்களை  தந்துள்ளார்.
 அவரது  இரண்டாவது  கவிதை  தொகுப்பான  "ஈரா நிலத்தை  எதிர்பார்த்து"  என்ற  கவிதை தொகுப்பின் இரண்டாம்  பதிப்பாக புன்னகை  அமைப்பு  மற்றும்  வன்னிப்  பட்டறை  இணைந்து அறிமுகம் செய்ய  உள்ளார்கள்.
வவுனியா கொரோவப்பொத்தான  வீத்தியில்  இருக்கும்  அருந்ததி மண்டபத்தில் 2017.07.08  மாலை 3.00 மணிக்கு  அறிமுக  விழா  நடைபெற இருக்கின்றது.
இந்த  அறிமுக  விழா  சிறப்பாக  நடைபெறவும் மன்னார்  பெனில் அவர்களின்  இலக்கியப்  பயணம்  மேலும்  சிறப்பாக அமையவேண்டும்  என்று  Ukதமிழ் இணையம்  வாழ்த்துவதோடு  இவ்  விழாவுக்கு இலக்கிய  ஆர்வலர்கள் கலந்து  சிறப்பிக்கும்  படி அவர்  சார்பாக  கேட்டுக்கொள்கின்றோம்.  

About UK TAMIL NEWS