மல்லாகத்தில் கடத்தப்பட்ட பாடசாலை மாணவி; வரணியில் மீட்பு - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

மல்லாகத்தில் கடத்தப்பட்ட பாடசாலை மாணவி; வரணியில் மீட்பு

யாழ்ப்பாணம் மல்லாகம் பகுதியில் வைத்து வேனில் கடத்திச் செல்லப்பட்ட பாடசாலை மாணவி இரண்டு மணித்தியாலங்களின் பின்னர் தென்மராட்சி வரணிப் பகுதியிலிருந்து மீட்க்கப்பட்டுள்ளார்.
குறித்த மாணவி வேனிலிருந்து தள்ளிவிடப்பட்ட நிலையில், பொதுமக்களால் மீட்க்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மல்லாகம் மகாவித்தியாலயத்தில் உயர்தரத்தில் கல்வி கற்கும் 18 வயதுடைய குறித்த மாணவி பாடசாலைக்கு நடந்த செல்லும் வழியில் இன்று காலை 7.30 மணியளவில் வேனில் வந்த ஆறு பேர் கொண்ட குழுவினால் கடத்தப்பட்டார்.
இந்நிலையில் கடத்தப்பட்டு இரண்டு மணித்தியாலங்களின் பின்னர் தென்மராட்சி - வரணி -அம்மா கடைப் பிரதேசத்தில் வைத்து வேனிலிருந்து தள்ளிவிடப்பட்ட நிலையில், பொதுமக்களால் மீட்க்கப்பட்டு சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் மேலதிக மருத்துவப் பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மல்லாகம் மற்றும் சாவகச்சேரிப் பொலிஸார் இணைந்து மேற்கொண்டுவருகின்றனர்.

About UK TAMIL NEWS