முல்லைத்தீவில் பாடசாலை மாணவன் துஸ்பிரயோகம்! - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

முல்லைத்தீவில் பாடசாலை மாணவன் துஸ்பிரயோகம்!

முல்லைத்தீவு – புத்துவெட்டுவான் பகுதியில் பாடசாலை மாணவன் ஒருவன் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், பிரதேச செயலகத்தின் ஊடாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக துணுக்காய் பிரதேச செயலாளர் இ.பிரதாபன் தெரிவித்துள்ளார்.
ஐயன்கன்குளம் பாடசாலையில் ஆறாம் தரத்தில் கல்வி பயிலும் மாணவன் ஒருவனே துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகியுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டிருந்தது.
குறித்த கிராமத்தில் பேருந்து சேவை இல்லாத காரணத்தால், பால் கொண்டு செல்லும் வாகனத்தில் குறித்த மாணவன் பாடசாலைக்குச் சென்றுள்ளான்.
இதன்போது பால் வாகன ஓட்டுநரால் குறித்த மாணவன் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படும் மாணவன் இரண்டு நாட்களாக பாடசாலைக்கு சமுகமளிக்காத காரணத்தால், பாடசாலை நிர்வாகத்தினர் மாணவனின் வீட்டுக்குச் சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது மேற்குறித்த சம்பவம் தெரியவந்ததையடுத்து சிறுவர் நன்னடத்தை அதிகாரிகளுக்கும் குறித்த விடயம் தெரியப்படுத்தப்பட்ட நிலையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

About UK TAMIL NEWS