பலூன் தொண்டையில் சிக்கி 7 வயது சிறுவன் பலி - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

பலூன் தொண்டையில் சிக்கி 7 வயது சிறுவன் பலி

பண்டாரவளை – நாயபெத்த பிரதேசத்தில் பலூன் தொண்டையில் சிக்கி 7 வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சிறுவன் தனது நண்பர்களுடன் பலூன் ஊதி விளையாடிக் கொண்டிருந்த போது பலூன் வெடித்து தொண்டையில் சிக்கியுள்ளது.
இதனையடுத்து பண்டாரவளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் குறித்த சிறுவன் உயிரிழந்துள்ளான்.
நானும் மனைவியும் கூலி வேலைக்குச் செல்வதால், எங்களது இரு பிள்ளைகளையும் பெரியம்மாவிடம் பார்த்துக் கொள்ளுமாறு கூறிவிட்டுச் சென்றேன்.
எனது மகன் ரொட்டி சாப்பிட்டு விட்டு அயல் வீட்டு சிறுவர்களுடன் விளையாட சென்றுள்ளான். அவர்களுடன் பலூன் ஊதி விளையாடும் போது, பலூன் வெடித்து தொண்டையில் சிக்கியுள்ளது.
இதனையடுத்து, சிறுவன் பேச முடியாமல் வீட்டுக்கு வந்தான்.
ரொட்டி துண்டு ஒன்று தொண்டையில் சிக்கி இருக்கும் என நான் பின் புறத்தில் தட்டினேன்.
எனினும் வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றோம். சிகிச்சை பலனின்றி மகன் உயிரிழந்தார்.
தொண்டையில் பலூன் சிக்கியே மகன் உயிரிழந்துள்ளார் என பிரேத பரிசோதனையில் தான்அறியக் கிடைத்தது என  சம்பவம் குறித்து சிறுவனின் தந்தை தெரிவித்துள்ளார்.

About UK TAMIL NEWS