அழிவை நோக்கிச் செல்லும் கடல் ஆமை முட்டைகளை கண்டுபிடித்து கொடுத்தால் ரூ.5000 பரிசு - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

அழிவை நோக்கிச் செல்லும் கடல் ஆமை முட்டைகளை கண்டுபிடித்து கொடுத்தால் ரூ.5000 பரிசு

ஆழ்கடலில் வசிக்கும் ஆமைகள் கடற்கரையில் முட்டையிட்டு குஞ்சு பொறிப்பது வழக்கம். ஆனால் மகாராஷ்டிராவில் கடந்த 10 வருடங்களில் கடல் ஆமைகள் முட்டைகளை காண்பது அரிதாகி வருகிறது.
அழிவை நோக்கி செல்லும் கடல் ஆமைகளின் இனத்தை காக்க மகாராஷ்டிரா வனத்துறை மற்றும் வன விலங்குகள் நலச்சங்கம் இணைந்து ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மீனவர்கள் கடல் விலங்குகள் பற்றி நன்கு அறிந்தவர்கள் என்பதால் கடல் ஆமையின் முட்டைகளை கண்டுபிடித்து கொடுத்தால் ரூ.5000 ரொக்கப் பரிசும், “கசவ் புரஸ்கார்” விருது அளித்து கவுரவிப்பதாக அறிவித்துள்ளனர்.
மேலும், கடல் ஆமைகள் விலங்கு வதை தடுப்பு சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. எனவே அவற்றை கொல்லுவது தண்டனைக்குரிய குற்றமாகும். மீறினால் ரூ.24,000 அபராதமும் 7 வருட சிறை தண்டனையும் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

About UK TAMIL NEWS