22 இலட்சம் மோசடி செய்துவிட்டு மந்திரவாதி வேடமிட்ட பெண் சிக்கினார் - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

22 இலட்சம் மோசடி செய்துவிட்டு மந்திரவாதி வேடமிட்ட பெண் சிக்கினார்

வெளிநாட்டில் வேலைவாய்ப்பு பெற் றுத் தருவதாக கூறி இரத்தினபுரி பிரதே சத்தைச் சேர்ந்த இருவரிடம் 22 இலட் சத்து 78 ஆயிரம் ரூபாவை மோசடி செய்த பின்னர் மந்திரவாதி போல் வேடமிட்டு தலைமறைவாக வாழ்ந்து வந்த பெண் ஒருவரை கலஹா பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இரத்தினபுரி பகுதியைச் சேர்ந்த குறித்த பெண், ஒருவரிடம் 16 இலட் சத்து 53 ஆயிரம் ரூபாவையும், மற்றையவரிடமிருந்து 6 இலட்சத்து 25 ஆயிரம்
ரூபாவையும் பெற்று மோசடி செய்துள்ள துடன் பொலிஸாரிடமிருந்து தப்பித்துக் கொள்வதற்காக கலஹா பொலிஸ் பிரி வுக்கு உட்பட்ட மஸ்கொள்ள பிரதே சத்தில் வீடு ஒன்றை வாடகைக்குப் பெற்று அங்கு மாந்திரீகம் மூலம் தீராத நோய்களை குணமாக்குவதாக கூறி ஏமாற்று வேலைகளிலும் ஈடு பட்டுவந் துள்ளார்.
இந் நிலையில் குறித்த பகுதியில் சந்தேக நபர் பதுங்கியிருப்பதாக இரத்தின புரி பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் ஒன்றையடுத்து, இரத்
தினபுரி பொலிஸார் கலஹா பொலி ஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப் படையில் மருந்து பெற்றுக் கொள்ள வந்தவர்கள் போல் மாறு வேடத்தில் அங்கு சென்ற கலஹாபொலிஸார் குறித்த பெண்ணைக் கைது செய்துள்ளனர்.

About UK TAMIL NEWS