‘சாமி-2’ படத்திற்காக லொக்கேஷன் தேடும் ஹரி - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

‘சாமி-2’ படத்திற்காக லொக்கேஷன் தேடும் ஹரி

ஹரி-விக்ரம்-திரிஷா கூட்டணியில் உருவான ‘சாமி’ படம் சூப்பர், டூப்பர் ஹிட்டானது. படம் வெளிவந்து 14 ஆண்டுகளுக்கு பிறகு அதன் இரண்டாம் பாகத்தை இயக்குகிறார் ஹரி. முதல் பாகத்தைப் போன்றே இரண்டாம் பாகத்திலும் விக்ரம், திரிஷா நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளனர்.
இரண்டாவது கதாநாயகியாக கீர்த்தி சுரேஷும் ஒப்பந்தமாகியுள்ளார். இசையமைப்பாளராக தேவிஸ்ரீபிரசாத் ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்திற்கான ஆரம்ப கட்ட பணிகளை ஹரி தற்போது தொடங்கியுள்ளார். முதலில் லொக்கேஷன் தேடும் பணிகளை தீவிரமாக மேற்கொண்டுள்ளார்.
விக்ரம் தற்போது ‘ஸ்கெட்ச்’, ‘துருவ நட்சத்திரம்’ ஆகிய படங்களில் பிசியாக இருக்கிறார். இப்படங்களை முடித்த பிறகுதான் ‘சாமி-2’ படத்தில் கவனம் செலுத்த உள்ளார். அதற்குள் அனைத்து ஆரம்பகட்ட பணிகளையும் முடித்துவிட தற்போது ஹரி தீவிரமாக பணியாற்றி வருகிறார்.
சமீபத்தில் இப்படத்திற்காக டெல்லியில் லொக்கேஷன் தேடும் பணியை ஹரி மேற்கொண்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இப்படத்தை சிபு தமீன்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கிறார்.

About UK TAMIL NEWS