மேல் மாகாண சபையின் நன்னடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்பு திணைக்களத்தின் கீழ் நிர்வகிக்கப்படும் கொழும்பை அண்மித்த, கொஹுவலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சிறுவர் இல்லம் ஒன்றில் உள்ள 19 சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில், அந்த இல்லத்தின் காப்பாளரான பெண்ணின் கணவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்றைய தினம் அவரைக் கைது செய்ததாகவும், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு கிடைத்த முறைப்பாடு ஒன்றுக்கு அமைவாக, அந்த அதிகார சபை கொஹுவலை பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டுக்கு அமைய இந்த கைது நடவடிக்கையை முன்னெடுத்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த இல்லத் தில் தங்கியிருந்த 10 வயதுக்கும் 17 வயதுக்கும் உட்பட்ட 19 சிறுமிகளை நேற்று கொஹுவலை பொலிஸ் நிலையத்துக்கு அழை த்து, பொலிஸ் நிலைய பொறுப்ப திகாரியின் ஆலோசனையின் பிரகாரம் வாக்கு மூலங்கள் பெறப்பட்டுள்ளன.
அதன் பின்னர் சிறுமியர் வெளிப்படுத்திய தகவல்களுக்கு அமைவாக 62 வயதுடைய குறித்த சந்தேகநபரைக் கைது செய்ததாக பொலி ஸார் கேசரியிடம் தெரிவித்தனர். இந் நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை நீதிமன் றில் ஆஜர் செய்து எதிர்வரும் ஆகஸ்ட் மூன்றாம் திகதி வரை விளக்கமறிய லில் வைத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சிறுவர் இல்ல சிறுமிகளிடம் பெற்றுக்கொண்ட வாக்கு மூலங்க ளைத் தொடர்ந்து அந்த சிறுவர் இல்லத்தையும் நேரில் சென்று பார்வை யிட்டுள்ளனர். இரு மாடிகளைக் கொண்ட குறித்த இல்லத்தின் மேல் மாடியில், உறங்குவதற்கான வசதிகளைக் கொண்ட பூரண அறைகள் இருந்த போதும் அவை ஒருபோதும் குறித்த சிறுமியருக்கு பயன்படுத்த அனுமதிக்கப்பட்டிருக்கவில்லை என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அத்துடன் குறித்த சிறுமியருக்கு சரியான முறையில் உணவு, பானங்கள் கூட அங்கு வழங்கப்பட்டிருக்கவில்லை என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குறித்த சிறுமியர் சர்வதேச பாடசாலை ஒன்றில் கல்விகற்று வரும் நிலையில், அவர்களை பாடசாலைக்கு அழைத்துச் சென்று அழைத்து வரும் வாகனத்தின் சாரதியாகவும் குறித்த சந்தேகநபரே செயற்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இந்த துஷ்பிரயோக சம்பவத்துக்கு சிறுவர் இல்ல காப்பாளரான பெண்ணின் தொடர் புகள் ஏதும் உள்ளதா எனவும் சிறுமியர் பாலியல் ரீதியிலான தொந்தரவுகளுக்கு உள் ளாக்கப்பட்டுள்ளனரா என்பது குறித்தும் உறுதிசெய்ய மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
