ஒரே குடும்பத்தை சேர்ந்த 13 பேர் தற்கொலை முயற்சி!! - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

ஒரே குடும்பத்தை சேர்ந்த 13 பேர் தற்கொலை முயற்சி!!

பட்டா வழங்காததால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் கோவை ஆட்சியர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை சூலூர் பகுதியைச் சேர்ந்த சரவணன். இவர் தான் வசிக்கும் வீட்டிற்கு பட்டா வழங்கக் கோரி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு மனு அளித்துள்ளார். ஒவ்வொரு மாதமும் தொடர்ந்து மனு அளித்து வந்துள்ளார். ஆனால் மாவட்ட நிர்வாகம் அவருக்கு வீட்டு மனை வழங்காமல் இழுத்தடித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அதிருப்தி அடைந்த சரவணன் மனைவி, தாய், தந்தை, குழந்தைகள் என 13 ஆட்சியர் அலுவலம் முன்பு, கையில் வைத்திருந்த மண்ணெண்ணையை தங்கள் மேல் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். தங்களின் கோரிக்கையை நிறைவேற்றவில்லை என்றால் தற்கொலை செய்யப் போவதாக மிரட்டினர். இதையடுத்து அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் தடுக்க காவல் துறையினர் அவர்கள் மேல் தண்ணீர் ஊற்றினர் .பின்னர் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். தனது வீட்டிற்கு பட்டா வழங்கக்கோரி பல முறை மாவட்ட ஆட்சியரிடம் மனுகொடுத்தும் எந்த நடவடிக்கை எடுக்கப்படாததால் இவ்வாறு செய்ததாக அவர்கள் கூறினர்.

About UK TAMIL NEWS