11 வயது சிறுமி தற்கொலை! வவுனியா சிறுவர் இல்லம் பதிவு செய்யப்படவில்லை - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

11 வயது சிறுமி தற்கொலை! வவுனியா சிறுவர் இல்லம் பதிவு செய்யப்படவில்லை

வவுனியா – வேப்பங்குளம் பகுதியில் அமைந்துள்ள அன்பகம் சிறுவர் இல்லம் பதிவு செய்யப்படாத நிலையில் இயங்கி வருவாதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுவர் இல்லங்கள் அரசாங்கத்தாலும், வடக்கு மாகாண சபையாலும் பதிவு செய்யப்பட்டு, அவற்றை கண்காணிப்பதற்கு என சிறுவர் தொடர்பான உத்தியோகத்தர்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பதிவு செய்யப்படாத குறித்த சிறுவர் இல்லத்தில் சிறுவர் பாதுகாப்புடன் தொடர்புடைய உத்தியோகத்தர்களே சிறுவர்கள் தங்குவதற்கான அனுமதியையும் வழங்கியுள்ளனர்.
குறித்த, இல்லத்தில் தங்கியிருந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை 11 வயது சிறுமி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, சில மாதங்களுக்கு முன்னரும் குறித்த சிறுவர் இல்லத்தில் சிறுமி ஒருவர் தற்கொலை செய்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

About UK TAMIL NEWS