விக்கிக்கு ஆதரவாக சட்டத்தரணிகள் பணிப்புறக்கணிப்பு - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

விக்கிக்கு ஆதரவாக சட்டத்தரணிகள் பணிப்புறக்கணிப்பு

வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரனுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையைக் கண்டித்து வவுனியா மாவட்ட சட்டத்தரணிகள் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
முதலமைச்சரின் ஊழலுக்கு எதிரான செயற்பாட்டுக்கு ஆதரவு தெரிவித்து இன்றைய தினம் சட்டத்தரணிகள் நீதிமன்றத்திற்கு செல்லாது பணிப்புறக்கணிப்பை வெளிப்படுத்தியிருந்தனர்.
இது தொடர்பில் சட்டதரணிகள் சங்கத்தை சேர்ந்த சட்டத்தரணி கங்காதரன் கருத்து தெரிவிக்கையில்,
குறிப்பிட்ட அமைச்சர்கள் பிழை செய்தார்களா, இல்லையா என்பது விசாரணை செய்து கண்டுபிடிக்க வேண்டும். அது பற்றி நாம் எதுவும் கூற முடியாது.
ஆனால் வடமாகாண முதலமைச்சருக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒரு முறையற்ற செயல். இதனை சட்டத்தரணிகள் ஆகிய நாங்கள் வன்மையான கண்டிப்பதுடன், அதனை தமிழரசுக் கட்சியினர் மீளப் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி வழக்குகளுக்கு சார்பாக ஆயராகாது இன்று நீதிமன்ற நடவடிக்கைகளை புறக்கணித்துள்ளோம் எனவும் கூறியுள்ளார்.

About UK TAMIL NEWS