இரவு இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் பலி மூவர் படுகாயம் - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

இரவு இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் பலி மூவர் படுகாயம்

வேகக்கட்டுப்பாட்டை இழந்த கப் ரக வாகனம் பனை மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியானதுடன் மூவர் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்றிரவு 9 மணியளவில் தும்பளை மணியகாரன் சந்திப் பகுதியில் இடம்பெற்ற இவ்விபத்தில் அன்னலிங்கம் புஸ்பகரன் (வயது-36) என்பவர் உயிரிழந்தார். மற்றும் அன்ரன் சந்திரகுமார், துரைசிங்கம் பாலகுமார் (வயது-25), அருமைத்துரை கருணாகரன் (வயது-43) ஆகியோர் படுகாயமடைந்தனர்.
இறந்த மற்றும் காயமடைந்த அனைவரும் தும்பளை கிழக்கு பருத்தித்துறையைச் சேர்ந்தவர்களாவர்.
நிதானமின்றி சாரதியால் செலுத்திச் சென்றதாகக் கூறப்படும் இவர்களின் வாகனம் மரத்துடன் மோதுண்டு விபத்துக்குள்ளானது.
இதில் கடுமையாக படுகாயமடைந்தவரே பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு எடுத்து வரப்பட்ட நிலையில் மரணமடைந்தவராவார்.
காயமடைந்த மூவரில் ஒருவர் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக மாற்றப் பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

About UK TAMIL NEWS