ஆயுதக் குழுக்களுடன் விக்கியின் கடைசி முடிவு - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

ஆயுதக் குழுக்களுடன் விக்கியின் கடைசி முடிவு

தமிழ் தேசிய கூட்டமைப்பில் தமிழரசு கட்சி தவிர்ந்த ஏனைய கட்சிகளின் தலைமைகளுடன் பேச்சுக்களை நடத்தி எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தனின் கடிதத்திற்கு பதில் கடிதம் தான் அனுப்பியுள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் தனது வாசஸ்தலத்தில் இன்று மாலை தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளான ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன், புளெட் அமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன் மற்றும் ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் முதலமைச்சரை சந்தித்து கலந்துரையாடினார்கள்...

About UK TAMIL NEWS