வடமாகாண அரசியல் நெருக்கடி! ஆளுநரை பாராட்டும் தென்னிலங்கை - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

வடமாகாண அரசியல் நெருக்கடி! ஆளுநரை பாராட்டும் தென்னிலங்கை

வடமாகாண சபையில் எழுந்துள்ள அரசியல் நெருக்கடி நிலைமை குறித்து முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ கருத்து வெளியிட்டுள்ளார்.
வடமாகாணத்தில் தற்போது எழுந்துள்ள பிரச்சனையை ஆளுநர் ரெஜினோல்ட் குரே கையாளும் விதம் சரியானது என பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
வட மாகாணம் மற்றும் வடமத்திய மாகாண முதலமைச்சர்களுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்பட்டது. இதன்போது இரு மாகாண சபை ஆளுநர்களும் வேறு விதமாக அணுகுமுறைகளை கையாண்டிருந்தனர்.
13ஆம் அரசியலமைப்பு திருத்தச்சட்டத்திற்கமைய 9 மாகாணங்களிலும் ஒரே சட்டம் செயற்பட வேண்டும் என பசில் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும் இரண்டு ஆளுநர்களும் இரண்டு முறையில் செயற்பட்டதன் ஊடாக ஒருவர் தவறு செய்துள்ளதாக பசில் குற்றம் சாட்டியுள்ளார்.
கூட்டு எதிர்க்கட்சி சில காலங்களுக்கு முன்னர் வடமத்திய மாகாண முதலமைச்சருக்கு எதிராக பெரும்பான்மை உறுப்பினர்களின் கையொப்பத்துடன் மனு ஒன்றை சமர்ப்பித்தது.
இந்த இரண்டு சந்தர்ப்பங்களை எடுத்து கொண்டால் ஆளுநர்கள் செயற்பட்ட விதம் மாறுபட்டதாகும். இதில் வட மாகாண ஆளுநர் மேற்கொண்ட முறையே சரியானதென முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.

About UK TAMIL NEWS