கால்வாயில் வீழ்ந்த முச்சக்கரவண்டி; குழந்தை, பெண் ஒருவர் பலி! - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

கால்வாயில் வீழ்ந்த முச்சக்கரவண்டி; குழந்தை, பெண் ஒருவர் பலி!

முச்சக்கர வண்டியொன்று கால்வாயில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் பலியாகியுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
நேற்று (08) இரவு இடம்பெற்ற குறித்த சம்பவத்தில், இரு முச்சக்கர வண்டிகள் ஒன்றுடன் ஒன்று மோதியுள்ளதோடு, அதில் ஒன்று கால்வாயினுள் வீழ்ந்துள்ளது.
இதன்போது, குறித்த முச்சக்கர வண்டியில் 6 பேர் பயணித்துள்ளதுடன், அதில் பயணித்த 21 வயது பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டதோடு, 3 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
குறித்த முச்சக்கர வண்டியில் பயணித்த, 7 வயது ஆண் குழந்தை மற்றும் 2 வயது பெண் குழந்தை ஆகிய இரண்டு குழந்தைகள் காணாமல்போன நிலையில் தேடப்பட்டு வந்ததோடு, இன்று (09) காலை, சம்பவ இடத்திலிருந்து சுமார் 10 கிலோமீற்றர் தொலைவில் 7 வயது குழந்தையின் சடலத்தை மீட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
குறித்த நபர்கள், பதுளை, மீகஹகிவுல பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
கால்வாயில் வீழ்ந்த குறித்த முச்சக்கர வண்டி சுமார் ஒரு கிலோமீற்றர் வரை அடித்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், காணாமல் போன மற்ற குழந்தையை தேடும் பணி இடம்பெற்று வருவதாக பொலிசார் தெரிவித்தனர்.

About UK TAMIL NEWS