திருட்டு மின்சாரம் பெற்ற இருவர் கைதுவல்வெட்டித்துறை பொலிஸ் பிரதேசத்திற்கு உட்பட்ட கொற்றாவத்தை, மற்றும் சமரபாகு பகுதிகளில் சட்டவிரோதமான முறையில் மின்சாரம் பெற்ற இருவர் கைது செய்யப்பட்டிருந்தனர்.நேற்று முன்தினம்இரவு மின்சார சபையின் புலனாய்வு அதிகாரிகளும், பொலிஸாரும் இணைந்து நடத்திய நடவடிக்கையில் இவர்கள் இருவர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
கைதான இருவரும் நேற்று பருத்தித்துறை நீதிமன்றில் முற்படுத்திய போது தலா 1 இலட்சம் ரூபா பெறுமதியான சரீரபிணையில் செல்ல நீதிவான் நளினி கந்தசாமி அனுமதி வழங்கினார்.