வடக்கிற்கான புதிய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நியமனம் - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

வடக்கிற்கான புதிய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நியமனம்

வடக்கு மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக ரொஷான் பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார்.
ரொஷான் பெர்னாண்டோ கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்ட பின்னர் நேற்று வடக்கு மாகாண ஆளுநர் ரொஜினோல்ட் குரேவை அவரது அலுவலகத்தில் சந்தித்துள்ளார்.
ரொஷான் பெர்னாண்டோவுடன் ஆளுநர் கலந்துரையாடல்களை மேற்கொண்டதுடன் வடக்கில் நடக்கும் குற்றச் செயல்களை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு கூறியுள்ளார்.
மேலும் போக்குவரத்துகளில் நடக்கும் தவறுகளை சீர்செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் ஆளுநர் கேட்டுக்கொண்டுள்ளார்.

About UK TAMIL NEWS