பதவியேற்ற உடனே பல தொலைபேசி அழைப்புக்கள்! வடமாகாண புதிய அமைச்சர் தகவல் - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

பதவியேற்ற உடனே பல தொலைபேசி அழைப்புக்கள்! வடமாகாண புதிய அமைச்சர் தகவல்

அமைச்சுப்பதவி கிடைத்த உடனேயே பல தொலைபேசி அழைப்புக்கள் வந்தன, எனினும் எதிர்பார்க்கும் அளவுக்கு நிதி வடமாகாண சபையில் இருக்காது என புதிதாக பதவியேற்றுள்ள வடமாகாண புனர்வாழ்வு மற்றும் மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.
அமைச்சராக பதவியேற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதை கூறியுள்ளார். தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
புனர்வாழ்வு மற்றும் மகளிர் விவகாரம் எனக்கு கிடைத்திருக்கின்றது. அமைச்சுப்பதவி கிடைத்த உடனேயே பல தொலைபேசி அழைப்புக்கள் வந்தன. ஏதோ கோடிக்கணக்கில் பணம் இருப்பதாக மக்கள் நினைக்கின்றார்கள்.
ஆனால் மக்கள் எதிர்பார்க்கும் அளவுக்கு நிதி வடக்கு மாகாண சபையில் இருக்காது என நினைக்கின்றேன்.
எப்படியிருப்பினும் மக்களுடைய பிரச்சினைக்கு நான் தொடர்ந்து குரல் கொடுத்து, அவர்களுக்கு சேவை செய்ய அர்ப்பணிப்புடன் செயற்படுவேன்.
இது பாதிக்கப்பட்ட மக்களுக்கு கிடைத்த அங்கீகாரம் எனவும் வடமாகாண புனர்வாழ்வு மற்றும் மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.

About UK TAMIL NEWS