முச்சக்கர வண்டி கட்டணம் அதிகரிப்பு - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

முச்சக்கர வண்டி கட்டணம் அதிகரிப்பு

அடுத்த மாதம் முதல் முச்சக்கர வண்டி கட்டணம் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதற்கமைய முதலாவது கிலோ மீற்றருக்காக அறவிடப்படும் கட்டணம் 10 ரூபாயினால் அதிகரிக்கப்படவுள்ளது.
அடுத்த மாதம் 10ஆம் திகதி முதல் அந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக முச்சக்கர வண்டி சங்கம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அந்த சங்கத்தின் தலைவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
முச்சக்கர வண்டிக்கான உதிரி பாகங்களின் விலையில் ஏற்பட்ட அதிகரிப்பே கட்டண உயர்வுக்கான காரணம் என தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தற்போது நடைமுறையில் முச்சக்கர வண்டிக்கான ஆரம்ப கட்ட கட்டணமாக 50 ரூபாய் அறவிடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

About UK TAMIL NEWS