விஜய்க்கு அடுத்த படத்தை சம்பளம் வாங்காமல் நடித்துக் கொடுப்பேன்: ஜெயம் ரவி - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

விஜய்க்கு அடுத்த படத்தை சம்பளம் வாங்காமல் நடித்துக் கொடுப்பேன்: ஜெயம் ரவி

இயக்குனர் விஜய் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள படம் ‘வனமகன்’. இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக சாயிஷா நடித்துள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். திங் பிக் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் ஏ.எல்.அழகப்பன் இப்படத்தை தயாரித்துள்ளார்.
வருகிற ஜுன் 23-ந் தேதி இப்படம் வெளியாகவிருக்கிறது. இந்நிலையில், நடிகர் ஜெயம் ரவி இன்று பத்திரிகையாளர்களை சந்தித்து படம் குறித்த அனுபவங்களை பகிர்ந்துகொண்டார். அப்போது அவர் கூறும்போது, இந்த படத்தில் பணியாற்றியபோது ஒரு குழந்தைபோல் பார்த்துக்கொண்டனர். என்னுடைய அப்பாவுக்கு பிறகு அதிக பொருட்செலவு செய்து இந்த படத்தை எடுத்திருக்கிறார்
இந்த படம் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன். அப்படி ஒருவேளை இந்த படம் பெரிய அளவில் போகவிட்டால் விஜய்க்கு அடுத்த படத்தை நான் சம்பளம் வாங்காமல் நடித்துக் கொடுப்பேன் என்று தெரிவித்தார். பின்னர், சம்பளம் வாங்காமல் நடிப்பது சாத்தியமில்லை என்றாலும், இரண்டு பேரும் சேர்ந்தாவது அடுத்த படத்தை தயாரிப்போம் என்று சிரித்துக் கொண்டே சொன்னார்.

About UK TAMIL NEWS