யாழ் போதனா வைத்தியசாலையில் திருடன் செய்த திருவிளையாடல்!! - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

யாழ் போதனா வைத்தியசாலையில் திருடன் செய்த திருவிளையாடல்!!

யாழ். போதனா வைத்தியசாலையில் பெண் ஒருவரை கூறிய ஆயுதத்தால் தாக்க முயற்சி செய்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவம் இன்று (17) மதியம் இடம்பெற்றுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் கூறினார்.

குறித்த பெண் குளியலறைக்கு செல்லும் போதே சந்தேக நபர் கழுத்தில் உள்ள சங்கிலியை பறிப்பதற்காக கூறிய கத்தி ஒன்றை பயன்படுத்த முயற்சி செய்துள்ளார்.

எனினும், சந்தேக நபரை யாழ். போதனா வைத்தியசாலையில் உள்ளவர்கள் தடுத்துள்ளனர்.

இதேவேளை, பெண்ணுக்கு ஆபத்து எதுவும் ஏற்பட வில்லை என்றும், சந்தேக நபரினை பொலிஸார் கைது செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.யாழ். போதனா வைத்தியசாலையில் பெண் ஒருவரை கூறிய ஆயுதத்தால் தாக்க முயற்சி செய்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

About UK TAMIL NEWS