தொழிநுட்பத்தின் வளர்ச்சியால் தற்போது ஓவியனுக்கு களம் இல்லாமல் போனது: திலகராஜ் எம்.பி - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

தொழிநுட்பத்தின் வளர்ச்சியால் தற்போது ஓவியனுக்கு களம் இல்லாமல் போனது: திலகராஜ் எம்.பி

பாடசாலை பாடவிதான செயற்பாடுகளுக்கு அப்பால் இணை பாடவிதான செயற்பாடுகளை கற்பித்தலுக்கு மாறாக, மாற்றுத்திட்ட விடயங்களை பாடசாலை மட்டத்தில் முழுமையாக செய்ய முடியாது.
தனியான அமைப்பாக இருந்தும் மாணவர்களிடத்தில் சித்திர போட்டியை நடத்தியமை பாராட்டுக்குரியது என நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகணம் திலகராஜ் தெரிவித்துள்ளார்.
ஹட்டன் ஜீவ ஊற்று ஆங்கிலம் அகடமியின் ஏற்பாட்டில் டி.கே.டபிள்யூ மண்டபத்தில் இன்று இடம்பெற்ற பாலர் பாடசாலை மாணவர்களுக்கு பரிசளிக்கும் நிகழ்வில் அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
குறித்த நிகழ்வில் கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் பிரதம அதிதிகாக கலந்து கொண்டதோடு பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் உட்பட மேலும் பலர் கலந்து கொண்டிருந்ததோடு பல கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றிருந்தன.
இதன்போது தொடர்ந்து உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் திலகராஜ்,
மாணவர்களின் திறமையை கல்வியினூடாக மட்டும் கணிப்பிட முடியாது மாறாக அவர்களிடத்திலுள்ள சித்திரம், இசை, நடனம் போன்ற கலையார்வங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
தற்போது நவீன தொழிநுட்பத்தினால் மனித செயற்பாடுகள் மந்தபோக்கில் செல்கின்றது. கடந்த காலங்களில் இவ்வாறான மேடை நிகழ்வுகளின் போது சிறந்த ஓவியனை தேடி பெனர்கள் எழுதும் காலம் இருந்தது.
தற்போது டிஜிட்டல் முறையில் மாற்றம் கண்டு விட்டதால் ஓவியனுக்கு களம் இல்லாமல் போனது. இன்றைய காலத்தில் சிறார்களிடத்தில் ஓவிய போட்டியை நடத்தியமை பாராட்டுக்குரியது.
அது போலவே இவ் அமைப்பு கடந்த வருடம் சிறுவர் துஸ்பிரயோகம் தொடர்பிலான நிகழ்வொன்றினை ஏற்பாடு செய்திருந்தது. அதிலும் பங்குபற்றும் வாய்ப்பு எனக்கு கிட்டியது.
இது போல சமூகத்தின் இன்றை தேவையை அறிந்து நிகழ்ச்சிகளை நடத்தும் இந்த அமைப்புக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக்கொண்டு எதிர்காலத்தில் சிறந்த பிரஜைகளாக வளர சிறார்களையும் வாழ்த்துகின்றேன் என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

About UK TAMIL NEWS