கோட்டையில் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள்! - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

கோட்டையில் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள்!

கொழும்பு – கோட்டைப் பிரதேசம் முழுமையாக உள்ளடங்கும் வகையில் தற்போது கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு கடந்த வாரம் கோட்டை நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்தது.
கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக தீவிரமாக தேடப்பட்டு வந்த நிலையில் ஞானசார தேரர் இன்று காலை திடீரென்று கோட்டை நீதிமன்றத்தில் சரணடைந்திருந்தார்.
இதனையடுத்து கோட்டை நோக்கி பொதுபல சேனாவின் ஆதரவாளர்கள் பெருமளவில் திரண்டு வரத் தொடங்கியுள்ளனர்.
இதன் காரணமாக அப்பகுதியில் கடும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதுடன் கோட்டை பிரதேசம் முழுமையாக உள்ளடங்கும் வகையில், குறிப்பாக கோட்டை நீதிமன்றப் பிரதேசத்தில் பொலிஸார் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர்.

About UK TAMIL NEWS