மன்னாரில் இரத்த தான முகாம் பற்றிய அறிவித்தல்… - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

மன்னாரில் இரத்த தான முகாம் பற்றிய அறிவித்தல்…

(20-06-2017)
மன்னார் மறைமாவட்டத்தில் பல்வேறு மனித நேயப் பணிகளை ஆற்றி வரும் கறிற்றாஸ்-வாhழ்வுதய பணியகத்தின் ‘உதவிக்கரம் பிரிவின் ஏற்பாட்டில் எதிர்வரும் 22 ஆம் திகதி வியாழக்கிழமை மன்னாரில் இரத்ததான முகாம் இடம் பெறவுள்ளதாக மன்னார் கறிற்றாஸ் வாழ்வுதய இயக்குனர் அருட்பணி ம. ஜெயபாலன் அடிகளார் தெரிவித்தார்.
-எதிர்வரும் 22 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 3 மணிவரை மன்னார் வயல் வீதியில் அமைந்துள்ள ‘உதவிக்கரம்’ நிலையத்தில் நடை பெறவுள்ளது.
-எனவே இரத்ததானம் செய்ய முன்வரும் ஆண் பெண் இருபாலாரும் இரத்ததான முகாமில் கலந்து கொண்டு இரத்த தானம் செய்து கொள்ள முடியும் என மன்னார் கறிற்றாஸ் வாழ்வுதய இயக்குனர் அருட்பணி ம. ஜெயபாலன் அடிகளார் மேலும் தெரிவித்தார்.

About UK TAMIL NEWS