இறக்குமதி செய்யப்பட்ட அரிசி பிளாஸ்டிக் அரிசி அல்ல! நுகர்வோர் அச்சம் கொள்ள தேவையில்லை - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

இறக்குமதி செய்யப்பட்ட அரிசி பிளாஸ்டிக் அரிசி அல்ல! நுகர்வோர் அச்சம் கொள்ள தேவையில்லை

இறக்குமதி செய்யப்பட்ட அரசி பிளாஸ்டிக் அரிசி என மேற்கொள்ளப்பட்டு வரும் பிரச்சாரங்கள் உண்மைக்கு புறம்பானது என நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் ஹசித திலக்கரத்ன தெரிவித்துள்ளார்.
முன்னெடுக்கப்பட்ட பிரச்சாரத்தைக் கவனத்தில் கொண்டு நாடு முழுவதும் விற்பனை நிலையங்களில் அரிசி மாதிரிகளைப் பெற்று பரிசோதனைகளைச் செய்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
இதன் போது செய்யப்பட்ட பரிசோதனையில் எந்த அரிசி மாதிரியிலும் பிளாஸ்டிக் இருப்பது உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இதனால், இறக்குமதி செய்துள்ள அரிசியை பயன்படுத்த நுகர்வோர் அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும் திலக்கரத்ன குறிப்பிட்டுள்ளார்.

About UK TAMIL NEWS