வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் சிரமதானப்பணிகளில் ஈடுபடும் இலங்கைப் படையினர்! - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் சிரமதானப்பணிகளில் ஈடுபடும் இலங்கைப் படையினர்!

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் பொங்கல் விழா எதிர்வரும் 12 ஆம் திகதி இடம்பெறவுள்ளதை முன்னிட்டு ஆலய பரிபாலன சபையினரால் ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் இலங்கைப் படையினரால் குறித்த கண்ணகி அம்மன் ஆலயத்தில் சிரமதானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
பெருமளவிலான படையினர் குறித்த சிரமதானப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் இனமத வேறுபாடின்றி அனைத்து மக்களும் இவ்வாலயத்திற்கு வந்து வழிபட்டுச் செல்வது வழமையாக காணப்படுகின்றது அத்தோடு குறித்த பொங்கல் விழாவிற்கு வருடாந்தம் இலட்சக்கணக்கான மக்கள் வருகைத்தருகின்றமை குறிப்பிடத்தக்கது.

About UK TAMIL NEWS