- Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்
நிறைவேற்று ஜனாதிபதி முறை தொடர்பில் சமகால ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிரடி நடவடிக்கை ஒன்றை எடுக்கவுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
நிறைவேற்று ஜனாதிபதி முறை தொடர்பில் ஒருவரும் எதிர்பார்க்க முடியாத தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார்.
நிறைவேற்று ஜனாதிபதி முறை ஒழிப்பு தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி சிரேஷ்ட உறுப்பினர்கள் மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இதன்போது தீர்மானமிக்க முடிவுகள் எட்டப்பட்டுள்ளதாக கட்சித் தகவலின் அடிப்படையில் குறித்த தகவல் வெளியிட்டுள்ளது.
சமகால ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது பதவியில் இருந்து செல்வதற்கு முன்னர், நிறைவேறு ஜனாதிபதி முறையை இரத்து செய்ய வேண்டும்.
அதற்கு இணையாக அரசாங்கத்தில் புதிய பதவியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற யோசனை தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்கு எதிர்பார்ப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவ்வாறான மாற்றத்தின் பின்னர் அரசியலமைப்பு திருத்த சட்டத்திற்கு செல்ல வேண்டும்.
இந்த நடவடிக்கைக்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, மஹிந்த ராஜபக்சவுக்கு நெருக்கமான குழுவின் ஆதரவை பெற்றுக் கொள்வதற்கு கலந்துரையாடல் நடத்தப்படவுள்ளதாக கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் நிறைவடையவுள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி இணக்கப்பாட்டு ஒப்பந்தத்தில் திருத்தம் செய்யப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

About UK TAMIL NEWS