இலங்கை நாடாளுமன்றத்துக்கு 70 வருடங்கள் நிறைவு - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

இலங்கை நாடாளுமன்றத்துக்கு 70 வருடங்கள் நிறைவு

இலங்கையின் நாடாளுமன்றத்துக்கு 70 வருடங்கள் நிறைவடைந்துள்ளமை முன்னிட்டு சார்க் அமைப்பின் சபாநாயகர்கள் தலைமையில் விசேட அமர்வு ஒன்று இடம்பெறவுள்ளது.
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் மூன்றாம் திகதி இந்த அமர்வு இடம்பெறவுள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற ஊடகவியலாளர்களின் ஆற்றலை மேம்படுத்தும் நோக்கில் நீர்கொழும்பில் நடைபெற்ற இந்த செயலமர்வில் உரையாற்றிய சபாநாயகர் இதனை தெரிவித்துள்ளார்.
ழுழுமையான ஊடக மத்திய நிலையம் ஒன்று நாடாளுமன்றத்தில் ஏற்படுத்தப்படும். நாட்டின் நாடாளுமன்றம் சர்வதேசத்துக்கு எடுத்துக்காட்டான நாடாளுமன்றமாக தரமுயர்த்துவதே இதன் நோக்கம் என்று சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

About UK TAMIL NEWS