லண்டனில் கொலையில் முடிந்த குழு மோதல்! 4 இலங்கைதமிழ் இளைஞர்களுக்கு சிறைத்தண்டனை..! - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

லண்டனில் கொலையில் முடிந்த குழு மோதல்! 4 இலங்கைதமிழ் இளைஞர்களுக்கு சிறைத்தண்டனை..!

லண்டனில் இரு குழுக்களிடையே இடம்பெற்ற மோதல்களின் போது, ஒருவர் கொலை செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் 4 இலங்கையர்களுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


கடந்த 2015ம் ஆண்டு நவம்பர் மாதம் லண்டன் மிச்சம் என்ற பகுதியில் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த இளைஞர்களுக்கிடையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டது.

இது இரு குழுக்களுக்கிடையிலான சண்டையாக மாறி மோதலாகியது.
இதன் போது லண்டனைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞர் கொல்லப்பட்டார்.

இந்தக் கொலைச் சம்பவம் குறித்து லண்டன் உயர் நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடந்து வந்தது.

இதையடுத்து நேற்று வழங்கப்பட்ட தீர்ப்பில், இலங்கைச் சேர்ந்த பிரஷாத் சோதிலிங்கம் என்பவருக்கு 29 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், சுகன் செல்வராசன் என்பவருக்கு 14 ஆண்டுகளும், சிவாகரன் என்பவருக்கு 31 மாதங்களும், விசுபரன் தயாபரன் என்பவருக்கு 21 மாதங்களும் சிறைத் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

About UK TAMIL NEWS