ஈராக்கில் போர் விமானங்கள் குண்டு மழை: 22 ஐ.எஸ். பயங்கரவாதிகள் பலி - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

ஈராக்கில் போர் விமானங்கள் குண்டு மழை: 22 ஐ.எஸ். பயங்கரவாதிகள் பலி

ஈராக்கில் போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்ததில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் 22 பேர் கொல்லப்பட்டனர்.
ஈராக்கில் ஆதிக்கம் செலுத்தி வருகிற ஐ.எஸ். பயங்கரவாதிகளின் கொட்டத்தை ஒடுக்குவதற்காக ராணுவம் தொடர்ந்து கடும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. அமெரிக்க கூட்டுப்படைகளும், ஈராக் ராணுவத்துக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றன.
இந்த நிலையில் அந்த நாட்டின் கிழக்கு மாகாணமான தியாலா, வட மத்தி மாகாணமான சலாகுதீன் ஆகியவற்றின் எல்லையில் உள்ள மெட்டிபிஜா பகுதியில் பதுங்கி இருந்த ஐ.எஸ். பயங்கரவாதிகளை குறிவைத்து ஈராக் போர் விமானங்கள் நேற்று முன் தினம் குண்டுமழை பொழிந்தன. இந்த குண்டுமழையில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் 20 பேர் கொன்று குவிக்கப்பட்டனர். அதுமட்டுமின்றி அவர்களது 5 வாகனங்கள் சின்னாபின்னமாக்கப்பட்டன.
இதற்கு மத்தியில் சலாகுதினீல் இரண்டு முனைகளில் இருந்து ஐ.எஸ். பயங்கரவாதிகள் தொடுத்த தாக்குதல்களை பாதுகாப்பு படைகள் முறியடித்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. அப்போது நடந்த கடும் மோதலில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் 2 பேர் கொல்லப்பட்டனர். அதைத் தொடர்ந்து ஐ.எஸ். பயங்கரவாதிகள் பின்வாங்கி ஓட்டம் பிடித்தனர்.
இந்த தாக்குதலில் பாதுகாப்பு படையினர் 3 பேர் பலியானதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

About UK TAMIL NEWS