வேலூர் குடியாத்தத்தில் நடிகர் மன்சூர் அலிகான் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுள்ளார் .
மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வரும் நிலையில், "உணவில் தனக்கு விஷம் கலந்து கொடுக்கப்பட்டது ? " என்ற பகீர் சந்தேகத்தை அவர் எழுப்பியுள்ளார் .
வேலூர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக நடிகர் மன்சூர் அலிகான் போட்டியிடுகிறார். இதற்காக குடியாத்தம் பகுதியில் பொதுமக்களிடையே தீவிர வாக்குச் சேகரிப்பில் நேற்று ஈடுபட்டிருந்தார்.
அப்போது அவருக்குத் திடீரென உடல்நலக் குறைவு ஏற்படுள்ளது . இதனால், அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மேலும் குடியாத்தத்தில் இருந்து அம்புலன்ஸ் மூலம் சென்னை கே.கே. நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் இரவு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
இவ்வாற பின்னணியில் தனக்கு உணவில் விஷம் கலந்து கொடுக்கப்பட்டது ? என்ற பகீர் சந்தேகத்தை கிளப்பி இருக்கிறார் மன்சூர் அலிகான்.
மக்கள் தொடர்பாளர் கோவிந்தராஜ் மூலம் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ குடியாத்தம் சந்தையிலிருந்து திரும்பி வரும்போது ஒரு இடத்தில் கட்டாயப்படுத்தி, பழ ஜூஸ் குடுத்தார்கள் .
அதன் பிறகு, மோர் குடுத்தார்கள் . உடனே வண்டியில் இருந்து விழ இருந்தேன். மயக்கம், அடி நெஞ்சுல தாங்க முடியாத வலி! பாலாறு ஹாஸ்பிடல் கூட்டிட்டு போனார்கள் . ட்ரீட்மென்ட் குடுத்தும் வலி நிக்கவில்லை .
உடனே சென்னைக்கு ஆம்புலன்ஸ்ல கூட்டிவந்தார்கள் . டாக்டர் பாலசுப்ரமணியன் ஐசியூ-ல அட்மிட் பண்ணி சிகிச்சை கொடுத்ததில் வலி கொஞ்சம் குறைவாகியுள்ளது . விஷ முறிவு,
நுரையீரல் வலி போக டிரிப்ஸ் குடுத்தர்கள் . இன்று மதியம் 2.00 மணிக்கு சாதாரண வார்டுக்கு மாத்துவாங்க” என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது .