புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் மீண்டும் திரும்பி வருவதற்காக
இன்று (15) மற்றும் நாளையும் (16) திகதிகளில் விசேட பேருந்து சேவைகள் இயக்கப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பயணிகளின் தேவைக்கு ஏற்ப பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அதன் தலைவர் 'ஷஷி வெல்கம' குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ரயிலில் வரும் பயணிகளின் வசதிக்காக சில விசேட ரயில் சேவைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்கள பிரதிப் பொது முகாமையாளர் 'என்.ஜே. இந்திபொலகே' தெரிவித்துள்ளார்.