மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரதேச செயலகத்தில் இதுவரை காலமும் தீர்க்கப்படாத பல பிரச்சினைகள் சம்பந்தமாக அவற்றை தீர்ப்பதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு மட்டக்களப்பு
மாவட்ட அரசாங்க "அதிபர் திருமதி J .முரளீதரன்"அவர்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர்
சாணக்கியன் அனுப்பிய கடிதத்தின் பிரகாரம் திகதி (18) சிறப்பு கூட்டம் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க
அதிபரினால் மட்டக்களப்பு கச்சேரியில் கூட்டப்பட்டிருந்தது.
பிரகாரம் நடைபெற்ற சிறப்பு கூட்டத்தின் போது என்னால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் ஆராயப்பட்டு அதற்கான தீர்வு திட்டங்களும் முன்மொழியப்பட்டது.
பல தீர்க்கப்படாத பிரச்சினைகளை முன்மொழிந்தேன். எனினும் பல பிரச்சனைகள் மற்றும் ஊழல்கள்,
அதிகார துஷ்பிரயோகங்கள் என்பன முன்மொழியப்படாமல் உள்ளது எதிர்வரும் காலங்களில் அவையும் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படும்.
சாணக்கியனால் முன்மொழியப்பட்ட பிரதேச செயலக மட்டங்களில் தீர்க்கப்படாத பிரச்சினைகள் - 2024,
மண்முனை தென் எருவில் மற்று பிரதேச செயலகப் பிரிவில் குறுமண்வெளி, குருக்கள்மடம், போரதீவுப்பற்று,
வெல்லாவெளி பிரதேச செயலகப் பிரிவில் மண்டூர், மண்முனை தென்மேற்கு, பட்டிப்பளை பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள அம்பிளாந்துறை போன்ற பாதைகளின் இறங்கு துறையின் பணிகள் அனைத்தும் இவ்வருடத்தில் புனரமைப்புச் செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். இதனால் பாரிய பிரச்சினைகளை மக்கள் எதிர்நோக்குகின்றனர்.
மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ சட்ட வைத்திய அதிகாரியினை நியமிக்க உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அரச ஒசுசல கட்டட வசதிகள் உள்ளது.
எனவே வைத்தியசாலைக்கு இதை கொண்டு வருவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
மண்முனை தென்எருவில் பற்று,
களுவாஞ்சிகுடி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் எண்டோஸ்கோபி (Endoscopy) வசதியானது இதுவரை காலமும் இல்லை.
அவ் வசதியினை அமைத்துக் கொடுப்பதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும்.மாவட்டத்தில் நீர்குழாய் இணைப்புக்கள் பற்றாக்குறையாக உள்ளது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
மாவட்டத்தில் பெரும்போக நெற்செய்கையில் ஈடுபட்ட விவசாயிகளுக்கான வெள்ள அனர்த்த காப்புறுதி நஷ்டஈடு 2023, 2024 இ
ற்கு உரியது இதுவரையில் வழங்கப்படவில்லை. அதனை வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
மட்டக்களப்பு மாவட்டத்தில் குடிநீர் பிரச்சினைகள் சம்பந்தமாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையுடன் தொடர்பு கொண்ட போது உள் வீதிகளுக்கான குடிநீர் விநியோகத்தை மேற்கொள்வதற்கு போதியளவான நீர் குழாய்கள் இல்லாமல் இருப்பதாக தெரியப்படுத்தினார்.
பிற மாவட்டத்தில் மேலதிக உள்ள குடிநீர் குழாய்களை கொண்டு வருவதற்கான நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.
வாகரையில் அமையப் பெற்றுள்ள கடற்கரையை அண்டிய இராணுவ முகாம், மற்றும் முறக்கொட்டாஞ்சேனை, பாலையடிவட்டை, தாண்டியடி போன்ற இராணுவ முகாம்கள், களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையம்
ஆகியவற்றிற்கு அரச காணியினை வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பன ஆகும்.